பொதுமக்களுக்கு தென்காசி ஆட்சியர் முக்கிய தகவல்

65பார்த்தது
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் விதிமுறை களின் படி அமைக்கப் பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். மற்றும் இப்பதவி அரசு பணிஅல்ல. விண்ணப்ப தாரர்கள் குழந்தை உளவி யல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகபணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கி யம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை
இயக்குநர், சமூகப் பாதுகாப்புத்துறை, எண் 300, புரசைவாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள் ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி