அம்பேத்கர் பிறந்த தின விழா அதிமுகவினர் மரியாதை

82பார்த்தது
அம்பேத்கர் பிறந்த தின விழா அதிமுகவினர் மரியாதை
சட்டமேதை அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா இன்று தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத் தில் கொண்டாடப்பட்டது.

செங்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டச் செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா  தலைமை தாங்கி அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன்,   செங்கோட்டை நகர  செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி