அதிமுகவில் இணைந்த புன்னையாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர்

67பார்த்தது
அதிமுகவில் இணைந்த புன்னையாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி புன்னையாபுரம் மதிமுக  ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவி திலகவதி கண்ணன் மற்றும் ஆதரவாளர்களுடன் தென்காசி அதிமுக வடக்கு மாவட்டக் அதிமுக செயலாளரும்,  கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி(எ)
குட்டியப்பா முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார்.   

புதியதாக அதிமுகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகளுக்கு தென்காசி வடக்குமாவட்ட செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர்  வடக்கு ஒன்றியச் செயலாளர் வசந்தம் முத்துபாண்டியன், நிர்வாகிகள் கிருஷ்ணாபுரம் தியாகராஜன்,  புன்னயாபுரம் மாரியப்பன்,  ஜானகிராமன், கோபால், முத்தமிழ் செல்வன், செல்வம், செல்லகனி, மாரியப்பன், புன்னையாபுரம் திருப்பதி,
சுந்தரம், மாணிக்கம், நாராயணன், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி