தென்காசி அருகே மருத்துவ முகாம் நடைபெற்றது

81பார்த்தது
தென்காசி அருகே மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையத்தில் திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா 19-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆலடி அருணா அறக்கட்டளை மற்றும் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை இணைத்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திமுக மாநில சுற்று சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.