வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், “குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது. மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டு விட்டு கனமழை பெய்யும். கனமழை தொடர்பாக சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.