மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜால்னாவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராவ்சாகேப் தன்வே புகைப்படம் எடுக்கும்போது தொண்டரை காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சொந்த கட்சிக்காரர்களே விமர்சித்து வருகின்றனர்.