ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியோடு, பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அங்கு மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்த்து நடைபெற உள்ளது. பாஜகவுக்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 6 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.