ஓடும் ரெயிலுக்கு அடியில் சிக்கிய இளம்பெண் (வீடியோ)

63பார்த்தது
ஓடும் ரெயிலுக்கு அடியில் 21 வயது இளம்பெண் ஒருவர் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஞ்சி ரெயில் நிலையத்தில் தமிழகம் செல்லும் ரெயிலில் மோனிகா குமாரி என்ற 21 வயது இளம்பெண் ஏற முயன்ற போது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே இருந்த இடைவெளியில் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் ரெயில்வே போலீஸ் படை அதிகாரிகள் விரைந்து வந்து அந்த இளம்பெண்ணை காப்பாற்றி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி