இந்த வங்கியின் கிரெடிட் கார்டு யூஸ் பண்றிங்களா?

74பார்த்தது
இந்த வங்கியின் கிரெடிட் கார்டு யூஸ் பண்றிங்களா?
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 1 முதல் சில குறிப்பிட்ட செயலிகள் மூலம் பில் செலுத்த முடியாது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்டுகளும் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் அதாவது பிபிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்பட வேண்டு என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. PhonePe, Cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறையை பின்பற்றியுள்ளன. இதனால் இந்த விதியை பின்பற்றாத வங்கிகளின் கிரெடிட் கார்டுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளில் செயலிகளில் இருந்து பில் செலுத்த முடியாது.

தொடர்புடைய செய்தி