ஆசிரியர் பணியிடை நீக்கம்: டிடிவி தினகரன் கண்டனம்

68பார்த்தது
ஆசிரியர் பணியிடை நீக்கம்: டிடிவி தினகரன் கண்டனம்
கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்தான எக்ஸ் பதிவில், சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத திமுக அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி