கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக த.வா.க போஸ்டர்

75பார்த்தது
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக த.வா.க போஸ்டர்
சிவகங்கை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், தொலைந்த நாள்: நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பின்பு, அடையாளம்: முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் என்பது மட்டுமே. நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் மோடியை புகழ்ந்து கொண்டும், தொகுதியை மறந்து சுற்றித் திரியும் அவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அச்சடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி