TCS நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் அதிகரிப்பு

85பார்த்தது
TCS நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் அதிகரிப்பு
முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 8.7 சதவீத வளர்ச்சியுடன் ரூ.12,040 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ.11,074 கோடியாக லாபம் இருந்தது. மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3.1 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த வருவாய் 5.4 சதவீத வளர்ச்சியுடன் 62,613 கோடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி