கல்லூரி, விடுதிக் கட்டணங்கள் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்!

57பார்த்தது
கல்லூரி, விடுதிக் கட்டணங்கள் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்!
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்கள் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு இணைய வசதிகளை செயல்படுத்த ரூ.3,206 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.10 கோடி மானியம் பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை புனரமைக்க வழங்கப்படும். சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி