தமிழக வெற்றி கழக கட்சியின் உறுதிமொழி அறிக்கை வெளியீடு!

560பார்த்தது
தமிழக வெற்றி கழக கட்சியின் உறுதிமொழி அறிக்கை வெளியீடு!
தமிழக வெற்றி கழக கட்சியில் உறுப்பினராக சேர செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ள விஜய், உறுதிமொழி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணிலிருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை போற்றுவேன். நமது அன்னை தாய் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி