சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு டெக் சிட்டி அமைப்பதற்கான திட்டத்திற்காக 150 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு, உலகளாவிய திறன் மேம்பாடு மையங்கள் ஏற்படுத்தத் திட்டம். சமூக உட்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு வசதிகளுடன் கூடிய உயர்தர அலுவலகங்களும் டெக் சிட்டியில் அமைய உள்ளன என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.