திமுக ஆட்சியில் தமிழகம் சீரழித்துள்ளது ஜே.பி நட்டா

50பார்த்தது
திமுக ஆட்சியில் தமிழகம் சீரழித்துள்ளது ஜே.பி நட்டா
தமிழகம் பாஜக தலைவர்களின் இதயத்தில் உள்ளது. உலகில் எங்கு சென்றாலும் தமிழ் பற்றியும், தமிழ் புலவர் பற்றியும் பிரதமர் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டின் பெருமையான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்றால் கலாசாரம், பண்பாடு, பழமையான மொழி குறித்து பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் சாதுக்கள், சன்னியாசிகள், தலைவர்கள் பற்றி பெருமை கொள்கிறோம். தமிழ்நாடு கலை, இலக்கியம், தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத சாதனைகளை செய்கிறது. தமிழர்கள் கடும் உழைப்பாளிகள், ஆனால் தமிழகம் மிகமோசமான தலைவரை பெற்றுள்ளது. திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருகிறது என என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி