விஜய் நடித்துள்ள 'தி கோட்' (G.O.A.T) படம் நாளை வெளியாகும் நிலையில், நாளை காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்க வேண்டும், நள்ளிரவு 2 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடித்துவிட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.