இந்தியாவில் தேசிய மகள்கள் தினம் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் மகள்களை கொண்டாடி பல பாடல்கள் வந்துள்ளன. மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது, நீ என் மகளாக வேண்டும் (பூவே பூச்சூடவா), ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்), ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்), உனக்கென்ன வேண்டும் சொல்லு (என்னை அறிந்தால்), கண்ணான கண்ணே (விஸ்வாசம்), வா வா என் தேவதையே (அபியும் நானும்).