அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி

78பார்த்தது
அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி
பாஜக பட்டியல் அணி மாநில தலைவராக உள்ள தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். மக்களவை தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிமுகவில் இணைகிறார் என கூறப்படுகிறது. இவர் பாஜகவில் மிகவும் செல்வாக்கான நபராக பார்க்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி