டேனியல் பாலாஜி மறைவு: சரத்குமார் இரங்கல்

81பார்த்தது
டேனியல் பாலாஜி மறைவு: சரத்குமார் இரங்கல்
நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமிழில் சித்தி நெடுந்தொடர் வாயிலாக நடிகராக அறிமுகமாகி, டேனியல் என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் காரணமாக டேனியல் பாலாஜி என அன்புடன் அழைக்கப்படும் சகோதரர், தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாக பார்க்கப்படுபவர் திடீர் மாரடைப்பால் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என‌ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி