எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி

51பார்த்தது
எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி
தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்தளம் வழங்க கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியில் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது. அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you