விண்வெளியில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில், "விண்வெளியில் சிக்கியுள்ள 2 வீரர்களும் தங்களது தசை சக்தி, மற்றும் எலும்பு அடர்த்தியை இழந்திருக்கலாம். அதனால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று நாசா தெரிவித்துள்ளது.