கோடை விடுமுறை - 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்

58பார்த்தது
கோடை விடுமுறை - 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையை ஒட்டி ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க நாடு முழுவதும் 9 ஆயிரத்து 111 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 2 ஆயிரத்து 742 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி