மாரடைப்பால் சுருண்டு விழுந்து மாணவன் பலி (வீடியோ)

107288பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்ற மாணவர், இந்தூரில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். கோச்சிங் சென்டரின் வகுப்பறையில் படிக்கும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவனின் மரணம் சக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி