மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மோடி அரசு முயற்சி?

81பார்த்தது
மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மோடி அரசு முயற்சி?
2014 க்கு பிரதமர் ஆன பிறகு மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க பாஜக மோடி அரசு மறைமுகமாக முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழு உடன் பிரதமர் மோடி ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக நிதி ஆலோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. பிரதமரின் இந்த யோசனையை நிதிக்குழு நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி