மன அழுத்தம், பதற்றம், கவலை போன்றவை இருந்தால் அது தோள்பட்டை, கழுத்து, முதுகு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். மன உளைச்சலுடன் தொடர்ந்து இருப்பது உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகளை ஏற்படுத்தும். எப்போதும் பயத்துடனும் மன அழுத்தத்துடனும் இருப்பது குமட்டல், எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை வலி பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.