பாஜகவை அதிமுக எதிர்ப்பதாக ஸ்டாலினே ஒப்புக்கொண்டார்

54பார்த்தது
பாஜகவை அதிமுக எதிர்ப்பதாக ஸ்டாலினே ஒப்புக்கொண்டார்
சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ், பாஜகவுக்கு எதிராக பேசத் தொடங்கியதுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தது குறித்து கூறும்போது, "பரவாயில்லை. இதுநாள் வரை அடிமை என்று பேசிய முதல்வரே இன்று நாங்களும் எதிர்க்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டார். அதிமுக பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு சாதமாக இருந்தால் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி