எஸ்டி கார்ப்பரேஷன் ஊழல்.. கர்நாடக அமைச்சர் ராஜினாமா

13608பார்த்தது
எஸ்டி கார்ப்பரேஷன் ஊழல்.. கர்நாடக அமைச்சர் ராஜினாமா
கர்நாடகாவில் எஸ்டி கார்ப்பரேஷன் ஊழல் காங்கிரஸ் அரசுக்கு புதிய நெருக்கடியை கொடுத்து வருகிறது. காங்கிரஸ் அமைச்சர் பி.நாகேந்திரா நேற்று (ஜுன் 7 வியாழக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகா மகரிஷி வால்மீகியின் அட்டவணைப் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் பணமோசடி நடந்திருப்பது அந்த நிறுவனத்தின் கணக்கு அதிகாரி மே 26ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து வெளிச்சத்துக்கு வந்தது. அரசு நடத்தும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் பெரிய தொகையை தனியார் வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியதில் ஈடுபட்டதாக நாகேந்திரா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்புடைய செய்தி