நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் நேற்று (ஜுன் 6) வியாழக்கிழமை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குல்விந்தர் கவுர், கங்கனாவை அடித்ததற்கான காரணத்தை கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விவசாயிகள் போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராடுவதாக கங்கனா கூறியிருந்தார். அந்த போராட்டக்காரர்களில் என் அம்மாவும் இருந்தார். இதனால்தான் நான் அவரை அடித்தேன் என கூறினார். கவுரை சஸ்பெண்ட் செய்த CISF, சண்டிகரில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தது.