தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 விசைப்படகுகளை சிறை பிடித்தனர். இவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேருக்கு 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.