கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்

26074பார்த்தது
கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்
கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையும் விடப்படவுள்ளது. இதனால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு மக்கள் பேருந்துகள், ரயில்களில் செல்வார்கள். அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன் பதிவு முடிவடைந்து விட்ட நிலையில், சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுமென ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி