இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி

69பார்த்தது
இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி
விண்வெளி ஆய்வுகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளிக்க நாசா முன்வந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாசா தலைவர் பில் நெல்சன், "விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற அமெரிக்கா விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கு தேவையான பயிற்சியை நாசா வழங்கும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி