ஓயோ விடுதியில் காதல் ஜோடி தற்கொலை! (வீடியோ)

66பார்த்தது
உத்திரப்பிரதேச பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவம் (20) என்ற இளைஞனும், ஸ்வீட்டி (23) என்ற பெண்ணும் வியாழக்கிழமை இரவு ஓயோ விடுதிக்குச் சென்று தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை இருவரும் வெளியே வராததால் விடுதி மேலாளர் ஜன்னலைத் திறந்து பார்த்த போது இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஸ்வீட்டி விஷம் குடித்ததாகவும், சிவம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி