விசிகவின் ஆதவ் அர்ஜூன் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விசிக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் அளித்துள்ள விளக்கத்தில், “லட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பு தான் 4 MLA-க்கள், 2 MP-க்களை வெல்ல காரணமாக இருந்தது. வேறு எந்த நிறுவனத்தாலும் விசிக வெற்றி பெறவில்லை. ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விசிக அங்கீகாரம் பெற்றது போன்று போலியான தோற்றத்தை ஆதவ் அர்ஜூன் உருவாக்க பார்க்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.