பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்த மாணவர்களில் சிலர் நிலுவைப் பாடங்கள் (Arrears) வைத்துள்ளனர். அவர்கள், எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின்போது, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.