இன்றைய காலகட்டத்தில் சில ஆளுநர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் செயலற்றவர்களாக இருக்கிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், "சில ஆளுநர்கள் தாங்கள் செய்யக்கூடாத செயல்களை செய்து வருகிறார்கள். இதனால், ஆளுநர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாவது கவலை அளிக்கிறது. ஆளுநரை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வைக்க வேண்டும். கட்சி விவகாரங்களுக்கு ஆளுநரை பயன்படுத்தக் கூடாது" என்று கூறியுள்ளார்.