எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுகுறித்த விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளின் விவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன. அதில் தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகள் உள்ளன எனவும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளதாகவும், அதில் 9 வழக்குகள் முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.