விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த பாம்பு

99941பார்த்தது
விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த பாம்பு
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது திடீரென்று ஒரு பாம்பு வந்து ஏறி படம் எடுத்துவிட்டு இறங்கியது. இந்த நிகழ்வு, கேப்டனை சிவன் கழுத்தில் இருந்த பாம்பு ஆசிர்வதித்ததாக நம்புகின்றனர். விஜயகாந்த் ஊர்வலத்தின் போது அவரது உடலை கருடன் 3 முறை வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.