சீனியர் சிட்டிசன்கள் பயன் பெறுவதற்கு சிறு சேமிப்பு திட்டம்

51பார்த்தது
சீனியர் சிட்டிசன்கள் பயன் பெறுவதற்கு சிறு சேமிப்பு திட்டம்
சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறுவதற்காக சிறு சேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் 60 வயதை தாண்டியவர்கள் முதலீடு செய்யலாம். இதுமட்டுமல்லாமல், பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் 55 வயதை தாண்டிய பிறகும், பணி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 50 வயதை தாண்டிய பிறகும் முதலீடு செய்யலாம். ஆக, 8% வட்டி என்றால் ஒரு காலாண்டுக்கு 60,000 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். ஒரு காலாண்டுக்கு மூன்று மாதங்கள் என்ற வீதம் மாதத்துக்கு 20,000 ரூபாய் வருமானம் பெறலாம்.

தொடர்புடைய செய்தி