சென்னை வேப்பேரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 'வேட்டையன்' படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த படவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மனக்கஷ்டத்துடன் ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். ஒருவேளை, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டியது என பேசும் போது அங்காரமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கை தட்டி வரவேற்றனர். இதை கூறும் போது ரஜினிகாந்தின் மன வருத்தமும் வெளிப்பட்டது.