இஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக இருக்கிறது. இது செரிமான பிரச்சனையில் இருந்து உடல் வீக்கம் வரை பல விஷயங்களில் தீர்வாக செயல்படுகிறது. இந்த இஞ்சி தண்ணீரை குடிப்பதால், வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நெஞ்செரிச்சலுக்கு நல்ல தீர்வாக அமையும். கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் தேவையற்ற செல்களை நீக்கி அசுத்தங்களை போக்குகின்றன.