'அமரன்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது

59பார்த்தது
'அமரன்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (அக் 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி