மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் (BSNL) புதிய லோகோ அறிமுகமானது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நடைபெற்ற விழாவில், BSNL-ன் புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், BSNL நிறுவனத்தின் SPAM FREE NETWORK, NATIONAL WI-FI ROAMING, BSNL IFTV உள்ளிட்ட 7 புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. புதிய லோகோவில் connecting india என்ற வாசகம் நீக்கப்பட்டு connecting bharat என்ற வாசகம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.