சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மணல் கொள்ளை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர் கேள்விகள் எழுப்பி வந்த சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண், மூக்கு, காது உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தாக்குதலுக்கு உள்ளான சமூக ஆர்வலர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் தொடர்பாக சாலை கிராமம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் ராஜசேகரன், பாலுச்சாமி. கார்த்தி, தாளையடிகோட்டையைச் சேர்ந்த கவி என்ற புகழ், மணி ஆகிய 5 பேர் மீது சாலைக்கிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.