சிங்கம்புணரி அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாபூர் கிராமத்தில் விஜயகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டும் , தேசிய முற்போக்கு திராவிட கழக இருபதாம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. காரைக்குடி திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் பெரிய மாடு , சின்ன மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 40 ஜோடிகள் என மொத்தம் 54 ஜோடிகளும் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 7 மையில் தூரமும், சின்ன மாடு பிரிவிற்கு 6 மையில் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் சின்ன மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகையும், பரிசுகளும் விழா குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி