ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்

2042பார்த்தது
சிவகங்கை கொன்னடிகருப்பர் ஆலயம் அருகே இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்: வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உள்ள கிரிஸ்டல் நிர்வாகம் ஜூன் மாதம் தருவதாகவும் ஜூலை மாதம் தருவதாகவும் தற்பொழுது ஆகஸ்ட் மாதம் தருவதாகவும் மாதந்தவறாமல் மாதங்களை மாற்றிக் கொண்டிருக்கிறதே தவிர ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை இன்று வரை அரசு மருத்துவமனை உதவிப் பணி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கவில்லை என்பதை வன்மையாக கண்டிப்பதுடன், இதை வலியுறுத்தி மாநில தலைமை ஆலோசனை யுடன் போராட்டங்களை நடத்துவது,
அரசு மருத்துவமனை உதவிப்பணி தொழிலாளர்களுக்கு வார விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும். மாதம்தோறும் 1 -ஆம் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும்.
வருடம் தோறும் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும்.
பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை காலங்களில் போனஸ் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி