மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 291 மனுக்கள்

67பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மதியம் சுமார் 3. 30 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 291 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ. ஆ. ப. , அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து, நீரில் மூழ்கி இறந்தமைக்காக, காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி வட்டத்தைச் சார்ந்த 08 நபர்களின் குடும்பத்தார்களுக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ. 1, 00, 000/-வீதம் மொத்தம் ரூ. 8, 00, 000/- மதிப்பீட்டில் நிவாரண தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ். செல்வசுரபி அவர்கள் உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி