இளையான்குடி பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

60பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் பொருட்டு சிறுபான்மை நல துறையின் மூலம் அரசு தையல் இயந்திரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு 300 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் 100 நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தாண்டு வழங்க அரசு உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில், தையல் இயந்திரம் வாங்குவதற்கு சிவகங்கை மாவட்டத்தில் மூன்று இடங்களில் தனியார் அறக்கட்டளையின் மூலம் 15 நாட்கள் பயிற்சி அளிப்பதாகவும், அந்த பயிற்சி நிறைவு அடைந்ததன் மூலம் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த பகுதியில் தையல் பயிற்சி கற்றுத்தர அரசு முன்வர வேண்டும் எனவும், வெளியிடங்களுக்கு வருவதால் குழந்தைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் முறையாக பரிசீலனை செய்து அந்தந்த பகுதிகளில் தையல் பயிற்சிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி