டெல்லி: சங்கம் விஹாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை துன்புறுத்தியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மொஹானியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத சைகைகள் செய்ததாகவும், தன் மீது முத்தமிட்டதாகவும் கூறி, பெண் புகார் அளித்ததை அடுத்து, எம்எல்ஏ மீது பாலியல் தொல்லை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரர் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக வீடியோ ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், சங்கம் விஹாரில் மீண்டும் போட்டியிடுகிறார்.