சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் படமாத்தூர் பகுதியில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு அடி ஆழத்திற்கு சுமார் துளை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் கடந்து சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது திடீரென மழை பெய்து வருகிறது இதனால், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வரும் நிலையில், மிக முக்கியமான இடமும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கடந்து செல்லும் இடமுமான படமாத்தூர் பகுதியில் உள்ள தார் சாலை இடிந்து விழுந்து திடீரென துளை ஏற்பட்டிருப்பதால் இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் வாகன ஓட்டிகளைஅதிர்ச்சியடையச் செய்துள்ளது.